குழந்தைக்கு மோடியின் பெயரைச் சூட்டிய இஸ்லாமியப் பெண்

குழந்தைக்கு மோடியின் பெயரைச் சூட்டிய இஸ்லாமியப் பெண்

2 mins read
10ef5ade-24c1-44dd-bc80-3990d227d7b9
-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யின் செயல்பாடுகளால் ஈர்க்கப் பட்ட இஸ்லாமியப் பெண் ஒருவர் தன் மகனுக்கு 'நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' எனப் பெயர் சூட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டம், பர்சாப்பூர் மஹ்ரூர் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் முஸ்டாக் அகமது. இவர் துபாயில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இம்மாதம் 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்று திரு முஸ்டாக்கின் மனைவி மைனாஸ் பேகம் (படம்) ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தேர்தலில் திரு மோடி பெரும் வெற்றி பெற்றதை அறிந்த திருமதி பேகம், முஸ்லி மாக இருந்தபோதும் தன் குழந் தைக்கு மோடியின் பெயரைச் சூட்ட முடிவு செய்தார்.

அவருடைய இந்த முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த குடும்பத் தினர், எப்படியாவது அவரது மனதை மாற்ற முயன்றனர். துபாயில் உள்ள திரு முஸ்டாக்கும் அந்த எண்ணத்தைக் கைவிடும் படி தம் மனைவியிடம் அறிவுறுத் தினார். ஆனால், அந்த முடிவில் தம்முடைய மனைவி உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி அவரும் தம் மகனுக்கு மோடி பெயரை வைக்க இணங்கினார்.

இதையடுத்து, தம் பிள்ளைக்கு மோடியின் பெயரைப் பதிவுசெய் வதற்காக திருமதி பேகம் ஊராட்சி அலுவலகத்தில் விண் ணப்பித்துள்ளார். அவர் இப்படி விண்ணப்பம் அளித்துள்ளதை ஊராட்சித் துணை வளர்ச்சி அதிகாரி கன்‌ஷியாம் பாண்டேவும் உறுதிசெய்தார்.

தமது விண்ணப்பத்தில், மோடி தலைமையிலான பாஜக அரசின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், கழிவறை கட்டுவதற்கான மானியத் திட்டம், முத்தலாக் முறை ஒழிப்பு முயற்சி போன்ற நடவடிக்கைகளை திருமதி பேகம் பாராட்டியுள்ளார்.

குழந்தைக்குப் பெயர் வைப்பது தமது குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரம் என்றும் இதில் வேறு எவரும் தலையிட முடியாது என்றும் திருமதி பேகத்தின் மாமனார் இத்ரீஸ் தெரிவித்தார்.