டிடிவி தினகரன்: வாக்கு மாயமானது ஆச்சரியம் தருகிறது

டிடிவி தினகரன்: வாக்கு மாயமானது ஆச்சரியம் தருகிறது

1 mins read

சென்னை: தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. அப்படியென்றால் எங்களது முகவர்கள் போட்ட வாக்குகள் எங்கே என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணை யத்தை நாடவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

"எனது நண்பர்கள், உற வினர்கள், தெரிந்தவர்கள் என ஏராளமானோர் இருக்க, ஒரு வாக்கு கூட பதிவாகாமல் போனது அதிர்ச்சி அளிக்கிறது," என கூறியுள்ளார் தினகரன்.

நடந்து முடிந்த மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களுக்குப் பின் நேற்று சென் னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், மாபெரும் வெற்றியை எதிர்பார்த்த தாகவும் அது கிடைக்காமல் போனதற்கான காரணம் போகப் போக தெரியவரும் என்றும் கூறினார்.