சென்னை: இந்தியாவில் மட்டுமின்றி தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் தண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்தப் பிரச் சினைக்கு ஒரு முக்கிய தீர்வு காண்பதே எனது முதல் கட்ட வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்க உள்ள நிலையில், "தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க உடனடி கவனம் செலுத்தப்படும்," என்று பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி உறுதியளித்துள்ளார்.
"தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டு வருவதற் கான ஏற்பாடுகளைச் செய்வதே எங்களின் முக்கிய பணியாக இருக்கும்.
"இந்த தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய் வதற்கு கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப் பதுதான் எனது முதல் வேலை," என்று நிதின் கட்காரி பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில், "இதுதான் பாஜக. தமிழக மக்கள் நிராகரித்தாலும் பாஜக தனது கடமையைச் செய்யும்," என்று கூறியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், "தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேட்டியைப் பார்த்தேன்.
"தமிழகம் தொடர்ந்து தண்ணீர் பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றதும் தமிழகத்துக்கு நீர் கிடைக்க வழிவகை செய்திடும் கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகள் இணைப்புத் திட்டமே எனது முதல் பணியாக இருக்கும் என்று நிதின் கட்காரி தெரி வித்தார். கிருஷ்ணா, கோதாவரி ஆறுகள் காவிரி யுடன் இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"கடந்த முறை மத்திய அரசு நெடுஞ்சாலைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததைப் போன்று இம்முறை நதிநீர் பிரச்சினையில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
"என்ன அற்புதமான மனிதர் இவர். பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் வாக்களித்த போதும் தமிழ்நாட்டின் மேம்பாட்டையே தனது முதல் திட்டமாக வைத்திருக்கிறார். இந்தக் கட்சியைத் தான் தமிழ்நாடு அங்கீகரிக்கத் தவறிவிட்டது," என்று கூறியுள்ளார் தமிழிசை.
இந்நிலையில், "கோதாவரி- கிருஷ்ணா நதிநீர் இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் நிறைவேறினால் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீரும். நிதின் கட்காரிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்," என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நிதின் கட்காரியின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

