'நரேந்திர மோடி'யின் முஸ்லிம் தாயார்; குடும்பத்தினர் புகார்

'நரேந்திர மோடி'யின் முஸ்லிம் தாயார்; குடும்பத்தினர் புகார்

1 mins read
26e49746-dd8f-4ab2-b3a7-7c3969e64e40
-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசிறியாக இருக்கும் முஸ்லிம் பெண், அவரது பெயரையே தமது குழந்தைக்கு வைத்துள்ளார். இதனால் அதிருப்தியிலுள்ள குடும்பத்தினர் அந்தப் பெயரின் பதிவுக்கு எதிராகப் புகார் கொடுத்தனர். மே 23ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்குப் பெயர் வைப்பது குறித்து குடும்பத்தினர் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது திரு மோடி மாபெரும் வெற்றியடைந்த செய்தி வெளிவந்தது. அதனால் தமது குழந்தைக்கு அவரது பெயரை வைக்க மைனாஸ் பேகம் முடிவு செய்தார். ஆரம்பத்தில் இதனை ஏற்க மறுத்த மைனாஸின் கணவர் முஸ்தாக் அகமது பின்னர் அவரது முடிவுக்கு இணங்கினார். குடும்பத்தாரின் புகார் கிராமப் பஞ்சாயத்து செயலாளரிடம் கொடுக்கப்பட்டதாகவும் சட்டத்தின்படிதான் இந்த விவகாரம் கையாளப்படும் என்றும் பஞ்சாயத்தின் துணை மேம்பாட்டுச் செயலாளர் கான்சியாம் பாண்டே தெரிவித்திருக்கிறார்.