சாதி குறித்த இழிசொற்களால் உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்

சாதி குறித்த இழிசொற்களால் உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்

1 mins read
3137c8be-46c5-4d44-890d-10521cafdebd
-

அரசாங்க மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணியாற்றிய ஒரு பெண்ணை மேலதிகாரிகள் சாதி குறித்த இழிசொற்களைப் பயன்படுத்தித் துன்புறுத்தியதால் அவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 'பிஒய்எல்' மருத்துவமனையில் குழந்தைப் பேறு மருத்துவராகப் பணியாற்றிய 23 வயது பாயல் தாட்வி, அவரது அறையில் மாண்டு கிடந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பாயலை இவ்வாறு துன்புறுத்திய ஹேமா அகுஜா, பக்தி மேகார், அங்கிதா கண்டில்வால் ஆகியோர் தற்போது தப்பியோடியுள்ளதாகவும் அவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவர்களாகப் பணியாற்றுவதற்கு மாநில அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். துன்புறுத்தல் குறித்து மருத்துவமனையின் மேல் நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டபோதும் ஒவ்வொரு முறையும் அது தட்டிக்கழிக்கப்பட்டதாக பாயலின் தாயார் தெரிவித்தார். ஆயினும், தங்களுக்கு இது குறித்து எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை என்று மருத்துவமனையின் தலைவர் ரமேஷ் பர்மால் தெரிவித்தார்.