பிரியங்கா: ராகுல் பதவி விலகுவது பாஜக வலையில் விழுவதற்கு சமம்

பிரியங்கா: ராகுல் பதவி விலகுவது பாஜக வலையில் விழுவதற்கு சமம்

2 mins read
41a5a8dd-a2fc-4922-86b9-53fec1847c9e
ராகுல் காந்தியுடன் பிரியங்கா.   கோப்புப் படம்: இணையம் -

சென்னை: தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவது பாஜகவின் வலையில் விழுவதற்கு இணையானது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் களத்தில் மோடிக்கு எதிராக தமது சகோ தரர் தனியாகப் போராடினார் என் றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அவர் பேசியதாக தமிழக ஊடகம் செய்தி வெளி யிட்டுள்ளது.

"பிரதமர் மோடிக்கு எதிராக என் சகோதரரை தனியாகப் போராடவிட்டு ஒதுங்கிக் கொண் டீர்கள். நீங்கள் எல்லாம் அப்போது எங்கே இருந்தீர்கள்?," என்று பிரியங்கா ஆவேசத்துடன் கூறிய தாக அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், ரஃபேல் விவகாரம், 'காவலாளி ஒரு திருடன்' என்ற முழக்கம் ஆகியவற்றை ராகுல் காந்தி எழுப்பியபோது, அவரை யாரும் ஆதரிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டதாகவும் அச் செய்தி தெரிவிக்கிறது.

இதற்கிடையே ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என மிரட்டியதாக தெரிவித்தார் என் றும் இல்லையெனில் கட்சிப் பத வியில் இருந்து விலகப் போவதாக கூறினார் என்றும் ராகுல் பேசிய தாக அச்செய்தியில் உள்ளது.

இதே போல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர்களும் கூட கட்சி நலன் களை புறந்தள்ளிவிட்டு, தங்கள் மகன்களை முன்னிறுத்துவதில் அக்கறை காட்டினர் என்றும் ராகுல் காந்தி சாடியதாகத் தெரிகி றது. இதனால் காங்கிரஸ் வட்டா ரங்களில் சலசலப்பு எழுந்துள்ளது.