மோடி பதவியேற்பு: ரஜினி, கமலுக்கு அழைப்பு

மோடி பதவியேற்பு: ரஜினி, கமலுக்கு அழைப்பு

1 mins read
65cdeb58-5c52-42ff-9a8a-3205be548220
நடிகர்கள் ரஜினி காந்த். கமல்ஹாசன். படம்: கோப்புப்படம் -

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்நிகழ்வில் பங்கேற்க இலங்கை அதிபர், பாஜக கூட்டணித் தலைவர் கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் களத்தில் பாஜகவை கடுமை யாக விமர்சித்த கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் விழாவில் பங்கேற்பது குறித்து அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனினும் ரஜினிகாந்த் உறுதியாக கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் கமல் மனம் மாறினால், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தே பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் ஆருடம் கூறப்படுகிறது.