பயங்கரவாதமற்ற சூழல்: பாகிஸ்தான் பிரதமரிடம் மோடி வலியுறுத்து

பயங்கரவாதமற்ற சூழல்: பாகிஸ்தான் பிரதமரிடம் மோடி வலியுறுத்து

1 mins read

புதுடெல்லி: மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, பயங்கரவாதமற்ற சூழலை ஏற்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

"நமது வட்டாரத்தில் அமைதி, வளம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்குவதும் நம்பிக்கையை கட்டமைப்பதும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்தினார்," என வெளியுறவு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.