ரஃபேல் வழக்கு: அரசு திட்டவட்டம்

ரஃபேல் வழக்கு: அரசு திட்டவட்டம்

1 mins read

புதுடெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்விக்கே இடமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.