திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மகளின் மணவிழா கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த தந்தை திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். இந்த செய்தியை மணமக்களிடம் கூறாமல் ரகசியமாக வைத்து திருமணத்தை உறவினர்கள் நடத்தி உள்ளனர்.
கேரள மாநிலம், கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத், 55. இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை காவல்நிலையத்தில் போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இவரது 3 பிள்ளை களில் கடைசி மகளின் திருமணத்தில் அவர் உயிரிழந்தார்.

