அடுத்த தலைவருக்காக காங்கிரஸ் மும்முரத் தேடல்

அடுத்த தலைவருக்காக காங்கிரஸ் மும்முரத் தேடல்

1 mins read
bd703ab5-023c-485f-8389-a3cfa867276a
-

காங்கிரஸ் தனது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க மற்றொரு கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ராகுல் காந்தி உறுதியாகக் கூறியதை அடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அந்தக் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை என்று திரு ராகுல் தெரிவித்தார். ஆயினும், கட்சியில் தாம் தொடர்ந்து 'ஒழுக்கமுள்ள வீரராகச்' செயலாற்றப்போவதாக அவர் கூறினார். திரு காந்தியின் அந்தத் தோல்வியை மிகவும் தனிப்பட்ட முறையில் கருதுவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்தார். கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் ராஜஸ்தான், சட்டிஸ்கார்க், மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் வென்ற காங்கிரஸ், பொதுத்தேர்தலின்போது அதே மாநிலங்களில் தோற்றது அக்கட்சிக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ் நிர்வகித்துவந்த உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதி, பாரதிய ஜனதாக் கட்சிக்குக் கை மாறியது திரு ராகுலுக்குக் துயரத்தை அளித்திருக்கிறது.