டெல்லி நகரின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 28ஆம் தேதி) காலை பெரும் தீ மூண்டது. இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. இந்திய நேரப்படி காலை 5.15 மணிக்கு, டெல்லியின் மேற்குப் பகுதியிலுள்ள பீராகரி மாவட்டத்தில் தீ மூண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. வாகனப் பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையின் தரைத்தளத்தில் மூண்ட அந்த நெருப்பு மேல் மாடிகளுக்கு விரைவில் பரவியது. தீ எதனால் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
டெல்லி தொழிற்சாலையில் தீ விபத்து
1 mins read
-

