டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்கள் வைத்திருந்த ஆடவர் கைது

டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்கள் வைத்திருந்த ஆடவர் கைது

1 mins read
92885703-8305-4d8b-a5bb-f61bb507f6b3
-

டெல்லி நகரிலுள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில், ஜெர்மனிக்குப் புறப்படவிருந்த ஓர் ஆடவரின் பயணப் பெட்டியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 'எல்எச்-761' சேவை எண் கொண்ட விமானத்தின் பயணியான அந்த இந்திய ஆடவரின் பெட்டிக்குள் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்ததை விமான நிலையத்தின் இயந்திர வருடிகள் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆடவரை டெல்லி போலிசார் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.