நச்சு சாராயம் அருந்திய பலர் பரிதாப பலி: சிலர் கவலைக்கிடம்

நச்சு சாராயம் அருந்திய பலர் பரிதாப பலி: சிலர் கவலைக்கிடம்

2 mins read

லக்னோ: நச்சு சாராயம் அருந்திய 14 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள பாராபன்கி மாவட்டத்தில் இருக்கும் ராம்நகரில் நேற்று முன்தினம் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நச்சு சாராயம் அருந்திய மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராம்நகரில் இயங்கி வந்த ஒரு மதுக்கடையில் இருந்து மது வாங்கியதாகவும், அதை அருந்திய பிறகு மயக்கமும் வாந்தியும் வந்த தாகவும் உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து போலி மது தயாரித்து விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தோரின் குடும்பத் துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அவர், நச்சு சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

இனி இத்தகைய உயிரிழப்புகள் நிகழக்கூடாது எனவும் அதிகாரிக ளிடம் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே ஆறு பேரை பலிகொண்ட நச்சு சாராயம் மேலும் பலரது உயிரை ஊசலாட வைத்துள்ளது.

பலியானோரின் எண்ணிக்கை 6 என அரசுத்தரப்பில் கூறப் பட்டாலும், இதுவரை 14 பேர் வரை பலியாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் போலி மது, நச்சு சாராயத்தால் பலர் உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் அசாம் மாநிலத்தில் போலி மதுவுக்கு 150 பேர் பலியாகினர். அவர்களில் பெரும் பாலானோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர்.

அதற்கு முன்பு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் பலரது உயிரைக் காவு வாங்கியது போலி மது. கடந்த 2011ல் மேற்குவங்க மாநிலத்திலும் 172 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.