ஜெய்ப்பூர்: சோதிடம் மூலம் ஒருவருக்குள்ள உடல் கோளாறுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறது ஜெய்ப்பூர்
நகரில் உள்ள தனியார் மருத்துவமனை. தினமும் அம்மருத்துவமனைக்கு வருபவர்களில் 30 பேருக்கு ஜாதகத்தின் உதவியோடு நோய்கள் கண்டறியப்படுவதாகச் சொல்கிறார் அங்கு
மருத்துவராகப் பணியாற்றும் சர்மா. "நோய்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சோதிடக் கணிப்புகளோடு, மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டு இரண்டடையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே சிகிச்சை அளிக்கப்படுகிறது," என்கிறார் சர்மா.

