நக்சல் தாக்குதலில் 11 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்

நக்சல் தாக்குதலில் 11 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்

1 mins read

ராஞ்சி: எல்லைப் பாதுகாப்புப் படையினர்மீது நக்சலைட்டுகள் நடத்திய திடீர்த் தாக்குதலில் 11 வீரர்கள் காயமடைந்து இருப்ப

தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குசாய் பகுதியில் நேற்று அதிகாலை வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அச்சமயம் வீரர்கள் பலர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நக்சல்கள் திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.