தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீர்

புதுடெல்லி: தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் நேற்று நடை பெற்றது. ஆணையத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

குறுவை சாகுபடிக்கு ஏதுவாக கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதத்தில் 9.2 டிஎம்சி நீர் திறக்கப் பட வேண்டும், சுற்றுச்சூழல் தேவைக்கு 2 டிஎம்சி நீர் உடன டியாக திறக்கப்பட வேண்டும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத் திற்கான காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை தமிழக அதிகாரிகள் முன்வைத்தனர்.

மேகதாதுவில் அணை கட்டு வதற்கான திட்ட அறிக்கை மீதான விவாதம் கூட்டத்தின் விவாத நிரலில் சேர்க்கப்பட்டதற்கு தமிழக அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்காலத்தில் நடைபெறும் கூட்டங்களில் மேகதாது அணை பற்றிய விவாதம் கூடாது என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்திற்குத் தேவையான நீரை கர்நாடகா முறையாக கொடுப்ப தில்லை எனவும் தமிழக அதிகாரிகள் முறையிட்டனர்.

கடுமையான விவாதங்களுக்கு இடையில், ஜூன் மாதத்திற்குரிய 9.19 டிஎம்சி காவிரி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அந்த நீர் தமிழகம் வந்து சேர்ந்த பிறகு, அதைத் தமிழக அரசு புதுச்சேரியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஆணை யத்தின் உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீர் திறக்கப்பட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவு ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டது என ஆணையத் தின் தலைவர் மசூத் உசேன் கூறினார்.

ஜூன் மாதத்திற்கான நீரை 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை திறக்க வேண்டும். ஒருவேளை, பருவமழை தாமதமானால் நீர் திறப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பெருஞ்சாணி, சிற்றார் மற்றும் மாம்பழத்துறையாறு, பொய்கை அணைகளின் மொத்த நீர் இருப்பு 500 மில்லியன் கன அடியாக தற்போது உள்ளது.

குறைந்தபட்சம் 1,500 கன அடி தண்ணீர் அணைகளில் இருந் தால்தான் விவசாயத்துக்குத் தண் ணீர் திறக்கப்படும். அதனால் அடுத்த மாதம் முதல் தேதி அங்கு தண்ணீர் திறக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவைவிட குடிநீர்த் தேவைக்காக அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பலமடங்கு அதிகமாக இருப்பதாலும் பருவ மழை காலந்தாழ்த்துவதாலும் அடுத்த மாதம் 12ஆம் தேதி அதிலிருந்து விவசாயத்துக்குத் தண்ணீர் திறக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் பெரும் கலக்கத்தில் உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு சற்று ஆறுதல் அளித் துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!