அமைச்சரவை குறித்து மோடி, அமித் ஷா கலந்துரையாடல்

அமைச்சரவை குறித்து மோடி, அமித் ஷா கலந்துரையாடல்

1 mins read
6d56c314-8001-4818-8bcb-9876852503a9
-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாரதிய ஜனதாத் தலைவர் அமித் ஷாவும் செவ்வாய்க்கிழமை சந்தித்து அடுத்த அமைச்சரவையைப் பற்றி ஐந்து மணி நேரம் கலந்துரையாடினார்கள். இதனைத் தொடர்ந்து, வரும் அமைச்சரவையில் திரு ஷா சேர்க்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. தேர்தல்கள் அடுத்த ஆண்டு புதுடெல்லியிலும் 2021ஆம் ஆண்டு பீகாரிலும் நிகழவுள்ளன. இந்நிலையில் அமித் ஷாவின் பங்களிப்பு அமைச்சரவையைக் காட்டிலும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அதிகம் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது. உள்துறை, நிதித்துறை, தற்காப்பு ஆகிய அமைச்சுகளில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, அருண் ஜேட்லியின் உடல்நிலை சரியாக இல்லாததால் அவர் மீண்டும் நிதியமைச்சர் பதவியை ஏற்கமாட்டார் என்பது சிலரின் ஊகம். திரு மோடியின் பதவியேற்பு விழா நாளை நடைபெறும். மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.