இந்திய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. முதன்முதலாக நடந்த தேர்தலுக்குப் பிறகு பதவியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து விழுக்காட்டினர் பெண்கள். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14 விழுக்காட்டினர் பெண்களாக உள்ளனர். 17 ஆம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடாளுமன்றத்தின் 542 இடங்களில் 303 இடங்களை பாரதிய ஜனதாக் கட்சி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் பிடித்துள்ளன. மாநிலக் கட்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் 22 இடங்களும் 'ஒய்எஸ்ஆர்' காங்கிரஸ் கட்சி 22 இடங்களும் பெற்றுள்ளன.
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்தது
1 mins read
-

