ஊழல் வழக்கு: பிரியங்கா காந்தியின் கணவருக்கு அழைப்பாணை

ஊழல் வழக்கு: பிரியங்கா காந்தியின் கணவருக்கு அழைப்பாணை

1 mins read
56d25094-6f58-4cd0-a861-fe25bf99ad83
-

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வத்ரா, சட்டவிரோதமானவை எனக் கூறப்படும் நிலச்சொத்து ஒப்பந்தங்கள் குறித்து இந்திய செயலாக்க ஆணையத்தால் (Enforcement Directorate) விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார். லண்டன், துபாய், ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் அவர் சொத்துகளை வாங்கியது குறித்து விசாரிக்கப்படவுள்ளார். விசாரணைக்காக அவர் அழைக்கப்படுவது இது ஒன்பதாவது முறை. இது பாஜக தனக்கு எதிராகச் செய்திருக்கும் சூழ்ச்சி எனத் திரு வத்ரா தொடர்ந்து கூறி வருகிறார். ஆயினும், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றிருக்கிறார். இதனை அடுத்து செயலாக்க ஆணையம் அந்தப் பிணையை ரத்து செய்யும்படி உயர்நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறது. திரு வத்ரா லண்டனில் மட்டும் கிட்டத்தட்ட 12 மில்லியன் பவுண்ட் (கிட்டத்தட்ட 106 கோடி ரூபாய்) மதிப்பிலான சொத்துகளை வைத்திருப்பதாகப் புலனாய்வு விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். 2005ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடையே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தச் சொத்துகள் அனைத்தையும் அவர் வாங்கியதாகக் கூறப்படுகிறது.