அமைச்சரவையில் இருந்து வெளியேற ஜெட்லி முடிவு

அமைச்சரவையில் இருந்து வெளியேற ஜெட்லி முடிவு

1 mins read
ea40e484-a61d-4f13-9352-61f8392e1763
-

இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவின் காரணமாக தாம் அடுத்த அமைச்சரவையில் பணியாற்றப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார். நாளை மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கும் திரு மோடி விரைவில் தமது புதிய அமைச்சரவையை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமது உடல்நிலை மீது கவனம் செலுத்துவதற்காக அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகியிருக்க விரும்புவதாக 66 வயது திரு ஜெட்லி திரு மோடியிடம் கடிதம் வழி தெரிவித்தார். அந்தக் கடிதத்தை திரு ஜெட்லி தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

கடந்தாண்டு மே மாதம் திரு ஜேட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அவருக்குப் புற்றுநோய் இருப்பதாக இவ்வாண்டு பிப்ரவரி உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் ஆறாவது பெரிய பொருளியலான இந்தியா ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ஏழு விழுக்காடு வளர்ச்சி காண்கிறது.