இந்தியாவை மோடி பிளவுபடுத்துவதாகக் குறிப்பிடும் கட்டுரை ஒன்றை முன்பு வெளியிட்டிருந்த 'டைம்' சஞ்சிகை, பொதுத்தேர்தலுக்குப் பிறகு அவர் அந்நாட்டை ஒன்றிணைத்திருப்பதாக இப்போது கூறுகிறது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தையும் ஏழைகளையும் திரு மோடி கவர்வதைப் போல் எதிர்க்கட்சிகளால் முடியவில்லை என்கிறது அந்தக் கட்டுரை.
இந்தியாவிலுள்ள ஏழை மக்கள் பலரின் கனவுகளைத் திரு மோடி உருவகப்படுத்துவதாகவும் எளிய மக்களுடன் அவரால் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் 'இந்தியா இன்கார்பரேட்டட்' நிறுவனத்தின் தலைவர் மனோஜ் லட்வா கூறியதாகப் புதிதாகப் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை குறிப்பிடுகிறது.
முன்பு வெளிவந்த கட்டுரையை எழுதியவரும் இப்போது வெளிவந்த கட்டுரையை எழுதியவரும் வெவ்வேறு நபர்கள். ஆயினும் பாஜகவின் வெற்றியால் சஞ்சிகை இவ்வளவு விரைவில் மனம் மாறுவதாக இணையவாசிகள் சிலர் கிண்டல் செய்கின்றனர்.

