இந்தியாவில் கடந்த பதினெட்டு ஆண்டுகளில் பதின்ம வயது பெண்களின் திருமணம் பாதிக் கும் மேல் குறைந்துவிட்டது. 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் திருமணம் செய்து கொண்டோர் விகிதம் 2000ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் 51 விழுக்காடு குறைந் துள்ளது. குழந்தைகளின் ஆரோக் கியத்துடன் தொடர்புடைய அம் சங்கள் மேம்பட்டு இருப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக் கிறது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இந்தியாவில் இயங்கி வரும் அரசு சார்பற்ற நிறுவன மான 'சேவ் த சில்ட்ரன்' வெளி யிட்டிருக்கும் உலக குழந்தைப் பருவ அறிக்கையில் இந்த விவ ரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆரோக்கிய குழந்தைப் பரு வத்திற்கான குறியீடு 632ல் இருந்து 137 புள்ளிகள் அதி கரித்து 769க்குச் சென்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. மேலும் பதின்ம வயதுப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது 2000ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் 63 விழுக்காடு குறைந்துவிட்ட தாகவும் ஆய்வறிக்கை தெரிவிக் கிறது.
1990ஆம் ஆண்டோடு ஒப்பிடு கையில் இது 75 விழுக்காடு குறைவு. 2000ஆம் ஆண்டு வாக்கில் பதின்ம வயதுப் பெண் கள் 3.5 மில்லியன் குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள். அது தற் போது 1.4 மில்லியனுக்கு குறைந் துள்ளது. உலக நிலவரத்தில் இந்தியா மட்டும் முக்கால் பங்கு பதின்ம வயது பிள்ளைப்பேற்றை குறைத்துள்ளது," என்றது அறிக்கை.
1990ஆம் ஆண்டில் 15 வய துக்கும் 19 வயதுக்கும் இடைப் பட்ட இளம்பெண்கள் அதிகமாக மணம் புரிந்துகொண்டார்கள்.
தற்போதைய நிலவரத்தோடு ஒப்பிடுகையில் அந்த விகிதம் 63 விழுக்காடு குறைந்துவிட்டது. 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 51 விழுக்காடு குறைந்துள் ளது. இவ்வாறு நிலைமை மேம் படாமல் இருந்திருந்தால் இந்தி யாவில் தற்போது 9 மில்லியன் இளம்பெண்கள் மணம் புரிந்தவர் களாக இருப்பார்கள் என்று அது விளக்கி உள்ளது.
இருந்தபோதிலும் கிராமப் புறங்களில் குறையாமல் நீடிக்கும் குழந்தை திருமணங்கள் கவலை யளிக்கின்றன.
நகர்ப்புறங்களில் 6.9 விழுக் காட்டு குழந்தைகளுக்குத் திரு மணம் செய்து வைக்கப்படும் அதே சமயம் கிராமப்புறங்களில் அந்த விகிதம் 14.1 விழுக்காடாக உள்ளது.
அதேபோல வசதிபடைத்தவர் களைக் காட்டிலும் ஏழ்மை நிலை யிலுள்ள குடும்பங்களில் குழந் தைத் திருமணங்கள் அதிக மாகக் காணப்படுகின்றன. இந்த நிலைமையைச் சரிப்படுத்த வேண் டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது என்றும் வருங்காலத் தலைமுறையினரின் நன்மைக்கு அது பயன்படும் என்றும் ஆய் வறிக்கை கூறுகிறது.

