புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் அமைய உள்ள புதிய மத்திய அமைச்சரவையில் யார், யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பது குறித்து மோடியும் பாஜக தேசியத் தலைவரும் நேற்று முன்தினம் பல மணி நேரம் விவாதித்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது.
இம்முறை பாஜகவை சேர்ந்த சில மூத்த தலைவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவி வேண்டாம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி யில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட னர். புதிய அமைச்சரவை யில் அமித் ஷாவும் இடம் பெறுவார் எனத் தெரிகிறது.
ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டவர்கள் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என எதிர் பார்க்கப்படுகிறது.
சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர வையில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதி முக ஓரே ஒரு எம்பியை மட்டுமே கொண்டுள்ளது என்றாலும் அக்கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் இன்று மாலை டெல்லியில் பதவியேற்க உள்ளனர்.

