பெங்களூரு: கர்நாடகா அரசுக்கு நெருக்கடி முற்றி வரும் நிலையில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முதல்வர் குமாரசாமி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் அரசுக்கு ஆதரவு அளிக்கும் 3 எம்எல்ஏக்கள் தங்க ளுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனப் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் முடி வடைந்ததையடுத்து பல்வேறு மாநி லங்களில் அரசியல் கள நிலவரம் மாறி வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி யின் ஆட்சி ஊசலாடுவதாக ஊட கங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைத் தொடரவேண்டும் என்றால் மாற்று கட்சி, அணிகளில் இருந்து அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வரும் எம்எல்ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என வலியுறுத்துகின் றனர். அந்த வகையில் காங்கிரசை சேர்ந்த 2 எம்எல்ஏக்களை அமைச் சர் ஆக்குவதாக குமாரசாமி உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் குமாரசாமியின் சொந்தக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சிக்கு விசுவாசமாக செயல்படு பவர்களுக்கு ஏன் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை? என அவர் கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
"விசுவாசிகளுக்கு மதிப் பில்லை. ஆனால் மாற்றுக் கட்சி களில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்தவர்கள் அமைச்சர்கள் ஆகின்றனர். எனவே விசுவாசிகளையும் அமைச் சர்களாக்க வேண்டும்," என மதச் சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ அஜய் சிங் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
இதேபோல் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவி வேண்டும் என முதல்வர் குமார சாமியை நேரடியாக சந்தித்து விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தற்போது இவரது தலைமையி லான அமைச்சரவையில் மூன்று இடங்கள் காலியாக உள்ளன.

