படிக்க இயலாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை பறிக்க உத்தரவு

படிக்க இயலாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை பறிக்க உத்தரவு

1 mins read

ஜெய்ப்பூர்: சாலை விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு பலகை களில் உள்ள வாசகங்களைப் படிக்க இயலாதவர்களுக்கு அளிக்கப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமையைப் பறிக்க வேண்டும் என ராஜஸ்தான் அரசுக்கு அம் மாநில உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

குறைந்தபட்ச கல்வியறிவு கூட இல்லாத இவர்களால் பாதசாரிக ளுக்கு பெரும் அச்சுறுத்தல் என நீதிமன்றம் விமர்சித்துள்ளது. இத்தகையவர்கள் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் எனவும் ராஜஸ்தான் அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

"நகரத்தில் உள்ள சாலை அறி விப்புகள், போக்குவரத்து எச்ச ரிக்கை அறிவிப்புகள், நெடுஞ் சாலையில் உள்ள அறிவிப்புகளை படிக்க முடியாதவர்களால் பாதசாரி களுக்கும் இதர வாகனங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. ஓட்டு நர் உரிமம் என்பது அதை விண்ணப்பிக்கும் நபருக்கு மட்டும் கிடைக்கும் வசதியாக மட்டும் பார்க்காமல், பாதசாரிகளின் பாது காப்பையும் மனதிற்கொள்ள வேண் டும்," என்று நீதிபதிகள் தெரிவித் தனர்.

ஆனால் இந்தியாவில் செயல் பாட்டில் உள்ள மத்திய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி இலகுரக வாகனங்களுக்கான ஓட் டுநருரிமை கேட்டு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி என எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று போக்குவரத்துத்துறை அதி காரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இத்தகைய அதி ரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.