பதவியை துறக்கும் அருண் ஜெட்லி

பதவியை துறக்கும் அருண் ஜெட்லி

1 mins read

புதுடெல்லி: உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கடிதம் வழி பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாகவே அருண் ஜெட்லி உடல் உபாதைகள் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

இந்நிலையில் தனது உடல்நிலையிலும் மேல் சிகிச்சையிலும் கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஜெட்லி இருந்துள்ளார்.