இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்யப்படவுள்ளது. இந்நிகழ்சியில் அவரது சொந்தக் கட்சியின் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், வர்த்தகத் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கு 6,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். இன்று காலை பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் இந்தியாவின் சுதந்திரத் தந்தை மோகன்தாஸ் காந்தி, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பை ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் இரவு 9.30 மணிக்கு) திரு மோடி பிரதமர் பதவியை ஏற்பார்.
பதவியேற்புக்கு ஆயத்தமாகும் பிரதமர் மோடி
1 mins read
-

