மருத்துவர் தானாக உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை; பிரேதப் பரிசோதனை

மருத்துவர் தானாக உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை; பிரேதப் பரிசோதனை

1 mins read
a90651cc-babd-4330-abdf-c858ddc0e81b
-

மருத்துவத் துறையில் முதுநிலை பயின்றுகொண்டிருந்த மருத்துவர் பயால் தடாவி, சாதி தொடர்பான துன்புறுத்தலின் காரணமாகத் தமது உயிரை மாய்த்துக்கொண்டதாக செய்தி வெளிவந்திருந்தது. ஆனால் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று பயாலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறிப்பிடுகிறது. பயாலின் இறப்பின் தொடர்பில் மூன்று மருத்துவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மூவரும் பயாலின் சாதியை ஏளனப்படுத்தி அவரைத் துன்புறுத்தியதாக பயாலின் தாயார் அதிகாரிகளிடம் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அம்மூவரின் வழக்கறிஞர்கள், பயாலின் சாதியைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். அந்த மூவரும் மருத்துவமனையில் மேலதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல மருத்துவமனை ஊழியர்கள் தயங்குவதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.