'பழங்குடி' பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டார்: குடும்பத்தினர் புகார்

'பழங்குடி' பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டார்: குடும்பத்தினர் புகார்

1 mins read

மும்பை: மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த பாயல் தாட்வி அண்மையில் தமது விடுதி அறையில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார். பழங்குடியினப் பெண்ணான அவரைச் சக மருத்துவர்கள் மூவர் சாதியைக் கூறி தொடர்ந்து இழிவுபடுத்தி வந்ததால் மனமுடைந்துபோய் தாட்வி உயிரை மாய்த்துக் கொண்டதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், அவரது கழுத்தில் காயமடைந்திருந்தது உடற்கூறு அறிக்கை மூலம் தெரியவந்தது.

இதையடுத்து, "தாட்வி தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்," என்று அவரின் குடும்பத்தினரும் வழக்கறிஞரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தாட்வியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அங்கிதா காந்தல்வால், பக்தி மேரே, ஹேமா அகுஜா ஆகிய மூவரையும் இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, அம்மூவருக்கும் இடைக்காலத் தடை விதித்த மகாராஷ்டிர மருத்துவர்கள் சங்கம், இந்த வழக்கில் நியாயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.