திருவனந்தபுரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றமில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார், "இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. அதை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை.
அந்த ஆணைக்குக் கீழ்ப்படியாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்," என்றார் அவர். அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓர் இடத்தில் மட்டுமே வென்றது.

