(காணொளி): நேசமணி மீது பாட்டியின் பாசம்

(காணொளி): நேசமணி மீது பாட்டியின் பாசம்

1 mins read
b34a4473-c65d-40e4-a2cb-00bc199ed9cd
-

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த 'நேசமணி ' கதாபாத்திரம் தற்போது இணையத்தில் மிகப் பிரபலமாகிவிட்டது. 'பிரென்ட்ஸ்' திரைப்பட கதாபாத்திரமான இந்த நேசமணியின் தலையில் சுத்தியல் விழுந்தது குறித்து உண்மையிலேயே பதறினார் ஒரு பாட்டி. நேசமணி குணமாகவேண்டும் என்று பிரார்த்திக்கும் பாட்டி ஒருவரின் காணொளி அண்மையில் டுவிட்டரில் வெளிவந்தது. நேசமணி குணமாகி திரும்பி வரும்போது அவர் தனக்கு சேலை வாங்கித்தரவேண்டும் என்றும் தன்னைக் காப்பாற்றவேண்டும் என்றும் அந்தப் பாட்டி காணொளியில் கேட்டிருக்கிறார்.

நேசமணி உண்மையான நபர் அல்லர். நேசமணியாக மிகத் திறமையாக நடித்த வடிவேலுவைத் திரைத்துறை புறம் தள்ளியது. பிரதமர் மோடியின் பதவியேற்புப் பற்றி நினைக்கவோ பேசவோ விரும்பாத பலர், அவரைப் பற்றிய பதிவுகளிலும் "நேசணி, நேசமணி" என்று கூவிக்கொண்டு திரு மோடி மீதான கவனத்தை திசைத்திருப்பி வருகின்றனர். தேர்தலில் மோடி வென்றாலும் அது குறித்த அதிருப்தியில் இருக்கும் பலர் இணையத்தில் #Pray ForNesamani வாயிலாகப் பலர் தங்கள் வெற்றியைக் காண்கின்றனர்.

பொய்யாகப் பிரார்த்திக்கும் பலருக்கிடையே உண்மையாகவே வேண்டும் ஓர் உள்ளத்தைக் காண்பது பலரையும் உருகச் செய்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்