சுடச் சுடச் செய்திகள்

ஜூன் 9ஆம் தேதி இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இரண்டாவது முறை பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி இலங்கைக்குப்் பயணம் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்வரும் 7ஆம் தேதி அன்று அவர் மாலத்தீவுக்­குச் செல்ல இருக்கிறார். 9ஆம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் மேற் கொள்வது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என அனைத்துலக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது முறை பிரதமராகப் பொறுப்பேற்ற பின் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். 

அண்மைக்காலமாக மாலத்தீவில் அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப் பட்டுள்ளது. இதன் காரண மாக அங்கு சீனாவின் கை ஓங்கும் என எதிர்பார்க் கப்பட்டது. 

இதையடுத்து இந்தியா மேற்கொண்ட சில நடவடிக்கைகளால் அங்கு மீண்டும் இந்தியாவுக்குச் சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தெரியவந்துள்ளது. எனினும் அவர் இலங்கை யில் சிலமணி நேரம் மட்டுமே தங்கி இருப்பார்.

அச்சமயம் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசுவார் என்றும், மேலும் அந்நாட்டில் இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon