குடிசை வீட்டில் வசித்து, எளிமையாக வாழ்ந்தவர் மத்திய அமைச்சரானார்

புவனேஸ்வர்: மத்திய அமைச்சர வையில் இடம்பெற்றுள்ள பிரதாப் சந்திர சாரங்கி தனது எளிமையால் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

67 வயதான இவர், ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். தனது குடிசை வீட்டுக்கு முன்புள்ள சாலையோரக் குழாயில் குளித்து சாதாரண உடையுடன் வலம் வரும் இவருக்குச் சொந்தமான வாகனம், வீடு, அசையும் சொத்துக்கள் என எதுவும் இல்லை.

தனது மூதாதையருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது முயற் சியால் ஓடிசாவில் எண்ணற்ற பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சமூக சேவையால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள இவரை ஒடிசா வின் மோடி என்றே குறிப்பிடு கின்றனர்.

இருமுறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவரது சேவையை அறிந்த பாஜக தலைமை, நாடாளுமன்றத் தேர்த லில் போட்டியிட வாய்ப்பளித்தது.

பிரசாரம் மேற்கொள்ள பிரதாப் சந்திர சாரங்கிக்கு வாகனம்கூட இல்லை. இதையறிந்த ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைமை அவருக்கு ஆட்டோ ஒன்றை அளித்தது. அதிலும், பெரும்பாலான சமயங்க ளில் மிதிவண்டியிலும் சென்றே பிரசாரம் மேற்கொண்டார் சாரங்கி.

இவருக்காக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா சென்று பிரசாரம் மேற்கொண்டார். அதன் பலனாக தேர்தலில் வெற்றி பெற்றார் சாரங்கி. 

பதவியேற்பு விழாவுக்கும்கூட வழக்கம்போல் தனது ஜோல்னா பையுடனும், எளிமையான உடைய ணிந்தும் வந்த அவரைக் கண்டு அரசு அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர். 

இந்நிலையில் இவரை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon