“பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளிடம் இருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம்”

புதுடெல்லி:  பெற்றோரை மதிக்காத, முறையாக கவனித்துக் கொள்ளாத பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் வகை யில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அத்தகைய பிள்ளைகளை பெற்றோருக்குச் சொந்தமான சொத்துகளில் இருந்து வெளி யேற்றலாம் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெற்றோரையும் மூத்த குடிமக்களையும் புறக் கணிப்பது அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைந்து வருவதால் மூத்த குடிமக்கள் சரியாக கவனித் துக்கொள்ளப்படுவதில்லை என்ற னர்.

“குறிப்பாக விதவைத் தாய்மார் கள் தங்களது இறுதிக்காலத்தை தனிமையில் கழிக்க வேண்டியுள் ளது. மேலும் உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக எந்த உதவி யும் கிடைக்காமல் இவர்கள் அவதிப்பட நேர்கிறது. எனவே தங்களை புறக்கணித்த பிள்ளை கள், வாரிசுகளிடம் இருந்து சொத்துகளைத் திரும்பப் பெறுவ தற்கு சட்டப்படி அவர்களுக்கு உரிமை உண்டு,” என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத இருவர் தங்களது பாட்ட னார் மற்றும் பாட்டிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். டெல்லி அரசு முதியோருக்குப் பாதுகாப்பு அளிக் கும் வகையில் உருவாக்கிய சட் டத்துக்கு எதிராக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

முதியோர், பெற்றோரை சரியாக கவனிக்கவில்லை எனப் பிள்ளை கள் குறித்து கிடைக்கும் புகார்க ளின் பேரில் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண் டும். புகார் உண்மை எனில் பாதிக் கப்பட்டவர்களின் சொத்துகளை வாரிசுகளிடம் பறிமுதல் செய்யலாம் என டெல்லி அரசு சட்டம் இயற்றி உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon