புதுடெல்லி: முன்னுரிமை வர்த்தகப் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய இயலாது என அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள் ளது. அதே வேளையில் இந்தியா வுடன் அணுக்கமான உறவை பேணப் போவதாகவும் அந்நாடு கூறி உள்ளது.
முன்னுரிமை வர்த்தகப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் இந்தியா பல வகையிலும் ஆதா யம் அடைந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா 5.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பொதுமை முன்னுரிமை அமைப்பில் இருந்து இந்தியா நீக்கப்படுவதாக அமெரிக்க அதிபரின் நிர்வாகம் அறிவித்தது. தேர்தல் நெருங்கிவிட்டதால் இது தொடர்பாக இந்திய அரசு மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இந்தியா நீக்கப் பட்டது குறித்து மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை என அமெரிக்க அரசின் உயரதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள தாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
"பொதுமை முன்னுரிமை வர்த்தகப் பட்டியலில் இருந்து இந்தியா மீட்கப்பட்டது முடிந்து போன விஷயம். மாறாக இரண்டா வது முறையாக பிரதமராகியுள்ள மோடி நிர்வாகத்துடன் எதிர்காலத் தில் அமெரிக்காவால் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும்? என்பதைக் கண்டறிவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
"இந்திய, அமெரிக்க வர்த்தக உறவை மேலும் வளர்ப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது. இதன் வழி இந்தியாவின் இளம் தலைமுறைக் கான வேலை வாய்ப்புகளை ஏற்ப டுத்த முடியும்," என்று அக்குறிப் பிட்ட அதிகாரி தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதற்கிடையே ஜூன் மாத இறுதியில் ஒசாகாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேச உள்ளார் பிரதமர் மோடி. அச்சமயம் இரு தரப்புக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

