வதைக்கும் வெயில்: மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. டெல்லியில் 112.64 டிகிரியாக வெப்பம் பதிவாகியுள்ளது.

டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும். அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்.

டெல்லியில் 114.8 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 

ராஜஸ்தானில் ஸ்ரீகங்கா நகர் பகுதியில் அதிகபட்சமாக 121.28 டிகிரி வெப்ப நிலைப் பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டாவிலும் 118.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon