மும்பை: மும்பை போரிவாலி ரயில் நிலைய பகுதியில், சாலையோரத்தில் இட்லி கடை நடத்தி வரும் நபர் ஒருவர், அங்குள்ள ரயில்வே கழிவறைக்குள் சென்று குழாயில் தண்ணீர்ப் பிடித்து வந்து உணவு தயார் செய்துள்ளார். இதுதொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

