வறட்சியின் கோர தாண்டவம்; வெப்பநிலை அதிகரிப்பால் டெல்லியில் சிவப்பு எச்சரிக்கை

வட இந்தியாவில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை தாண்டியுள்ள நிலையில் தண்ணீர்த் தட்டுப்பாடு, கடும் வெப்பத்தால் ஏற்படும் மயக்க நோய் போன்றவை நிகழ லாம் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. ராஜஸ்தான் பாலை வனத்தில் உள்ள சுரு எனும் நகரில் நேற்று முன்தினம் வெப்ப நிலை 50.6 டிகிரி செல்சியசை எட்டியதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

ராஜஸ்தானின் பல நகரங்களில் வெப்பநிலை 47 டிகிரி செல்சிய சுக்குமேல் பதிவாகி உள்ளது. ராஜஸ்தானில் உள்ள பலோடியில் 2016ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் ஆக அதிக வெப்ப நிலையாக 51 டிகிரி செல்சியஸ் பதிவானது. ராஜஸ்தான், மகாராஷ் டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெயில் இன்னும் ஒரு வாரம் வரை நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரி வித்துள்ளது.

கடும் வெப்பத்தின் காரணமாக பலர் மாண்டிருப்பதாகப் பதிவாகி யுள்ள நிலையில், இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் வெப்ப நிலை 46 டிகிரி செல்சியை தாண்டியிருப்பதால் அங்கு கடும் வெப்பநிலையைக் குறிக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் மதிய வேளைகளில் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மலைப்பிரதேசமான இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் 44.9 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்க ளில் வெப்பத்தால் நீர்நிலைகள் முற்றிலும் வற்றிப்போய் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா வில் கால்நடைகளின் தாகத்தைத் தீர்க்கக்கூட தண்ணீர் இல்லாமல் அவற்றை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயத்துக்கு அறவே தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக் கும் நிலையில் பீட் கிராமவாசிகள் துணி துவைப்பதைக்கூட நிறுத்தி விட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டது. இந்தியாவில் 40 விழுக்காட்டுக்கு அதிகமான பகு திகள் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவின் வறட்சி யைத் தணிக்க வரும் பருவமழை கூட ஒரு வாரம் தள்ளி, எதிர்வரும் வியாழக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவா கவே மழை கிடைக்கும் என கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!