மும்மொழிக் கல்விக்கு தமிழகத் தில் பலத்த எதிர்க்குரல்கள் எழுந்ததையடுத்து, "இந்தியைத் திணிக்கும் நோக்கமில்லை. மக்க ளின் கருத்தைக் கேட்காமல் எதுவும் நடக்காது," என இந்தியா வின் மத்திய மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
"பொதுமக்களின் கருத்தை மட்டுமே கஸ்தூரி ரங்கன் குழு வரைவு அறிக்கையாகச் சமர்ப்பித் துள்ளது; இதைக் கொள்கை முடிவாக அரசு அறிவிக்கவில்லை. மக்களிடமும் மாநில அரசாங்கங் களிடமும் கருத்துகளைப் பெற்ற பிறகே, மத்திய அரசு இந்த வரைவு அறிக் கையை இறுதிசெய்யும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து மொழி களையும் சமமாக ஊக்குவிக்கும்," எனவும் மனிதவள அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாஜக 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா வின் கல்விக் கொள்கையைத் திருத்தும் நோக்கில் திரு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.
பல்கலைக்கழக கட்டுமானங் களில் மாற்றம் செய்தல், உயர் கல்விப் பாடத் திட்டங்களைக் கல்வியாளர்கள் தீர்மானிப்பதை நிறுத்திவிட்டுச் சந்தைக்கு ஏற்ப கல்விமுறை என்ற வகையில் தனியாரிடம் ஒப்படைத்தல், கல்லூ ரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குதல், தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வைத் தடுப்பது, தேசிய கல்வி ஆணையத்தை உரு வாக்குவது, அனைத்து மாநிலங் களிலும் இந்தியைப் பயிற்றுவித் தல் போன்றவை புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளன.
அந்தப் பரிந்துரைகளில் இந்தி பேசாத மாநிலங்களில் தங்களின் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பிக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.
இதன்மூலம் பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்கப் பார்ப்பதாக தமிழக மக்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்க்குரல் எழுப்பினர்.
மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நடக்கும் என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கின.
இந்நிலையில், "தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்ற முடியும்," என முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்குக் கடி தம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் எனத் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசின் கொள்கை முடிவை திட்ட வட்டமாக அறிவித்த நிலையில் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வமும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
1965ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்திமொழி திணிப்புக்கு எதிராக நிகழ்ந்த மொழிப்போரையும் அத னால் தமிழகத்தில் காங்கிரஸ் எதிர்கொண்ட நிலையையும் சுட் டிக்காட்டி பாஜகவை அதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான 'நமது அம்மா' கட்டுரை வெளியிட்டு உள்ளது.
இந்தி மொழி திணிப்பு இருக் காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் அக்கட்சியின் தேசி யச் செயலாளர் எச். ராஜாவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் குறிப்பிட்டு உள்ளனர்.

