கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் பராக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யான அர்ஜுன் சிங் செய்தி யாளர்களிடம் பேசியபோது, மக் களவை தேர்தல் பிரசாரத்தின்போது மம்தாவைப் பார்த்து 'ஜெய் ஸ்ரீராம்' என்று சொன்ன பாஜக தொண் டர்கள் 10 பேரை மம்தா கைது செய்தார்.
தற்போது நாங்கள் அவ ருக்கு 'ஜெய் ஸ்ரீராம்' என்று எழுதப் பட்ட 10 லட்சம் தபால் அட்டைகளை அனுப்ப உள்ளோம். முடிந்தால் 10 லட்சம் பேரையும் மம்தா கைது செய் யட்டும்," என்று சவால் விட்டுள்ளார்.
முன்னதாக வடக்கு 24 பர்க னாஸ் மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்த இடம் அருகே 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் போட்டதால் திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலிசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

