ராஞ்சி: கைபேசியில் நீண்ட நேரம் பேசிய சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகாவில் தனது உறவி னர் வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவன் அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வருகிறார். அதே பள்ளிக்கூடத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியுடன் அவர் தொடர்ந்து நீண்ட நேரமாக கைபேசியில் பேசியுள்ளார்.
இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க கிராமப் பஞ்சாயத்து சார் பில் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக் கிழமை சிறுவர்-சிறுமி திருமணம் நடைபெற்றது. இருவரின் குடும் பத்தினரும் திருமண விழாவில் கலந்துகொண்டனர். அதன்பிறகு சிறுமி, தன் கணவரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்தத் திரு மணத்திற்கு எதிராகக் குழந்தை கள் நல வாரியம் சார்பில் நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ் விவகாரம் குறித்து அந்த அமைப் பின் தலைவர் ராஜ்குமார் வர்மா கூறுகையில், "சிறார் திருமணம் குறித்து குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளோம். தகவல் களைச் சரிபார்த்த பின் சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்," என்றார்.
2019-06-03 06:00:00 +0800
ஆந்திராவைப் பின்பற்றி மதுவை ஒழிக்க தமிழகத்தில் குரல்
ஹைதராபாத்: ஆந்திர மாநில முதல்வராக கடந்த வியாழக் கிழமை பதவி ஏற்ற ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன்தினம் தடேபள்ளியில் உள்ள தனது இல்லத்தில் நிதி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை அழைத்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மாநிலத்தின் தற் போதைய நிதி நிலைமையை முதல் வரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.
அப்போது, மாநிலத்தில் மது விலக்கை படிப்படியாக அமல்படுத் துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார்.
மதுப்புழக்கம் அதிகரிப்பதைத் தடுக்க ஒரு உத்தி வகுக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூறினார். மேலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை முதலில் அகற்றுவது, பிறகு மதுக்கடை களின் எண்ணிக்கையை குறைப் பது, பின்னர் நட்சத்திர ஹோட்டல் களில் மட்டுமே மதுவை அனுமதிப் பது என ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என தெரிகிறது.
இதேபோல், தமிழகத்தில் அதி முக ஆட்சியைக் கைப்பற்றியபோது பூரண மதுவிலக்கு கொண்டுவரப் படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்பட வில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு பஞ் சாலை மற்றும் பொதுத் தொழி லாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் எஸ்.திவ்யா கூறுகையில், "ஆந்திராவில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி பூரண மது விலக்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார்.
"ஆனால், தமிழகத்தில் படிப் படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவித்த அதி முக அரசு அதற்கான எவ்வித முயற்சியையும் மேற்கொள்ள வில்லை. பெண்கள் மற்றும் குழந் தைகள் பாதிக்கப்படுவதை கருத் தில் கொண்டு தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்," என்றார்.

