புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்த லில் படுதோல்வி அடைந்ததை அடுத்து அதற்கான காரணங்களை ஆராயத் துவங்கி உள்ளது காங்கி ரஸ் கட்சித் தலைமை. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு ஐயங்கள் குறித்தும் அக்கட்சி ஆராய உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. பத்து விழுக்காடு இடங்க ளைக் கூட காங்கிரசால் கைப்பற்ற முடியவில்லை.
இந்நிலையில் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய்வ தற்கு தனிக்குழு ஒன்றை காங்கி ரஸ் தலைமை அமைத்துள்ளது.
மேலும், தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குச் சாவடி வாரியாக வாக்குகளின் விவரங் களை தாக்கல் செய்யுமாறு கட்சி வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் வேட்பா ளர்கள் தாங்கள் பெற்ற வாக்கு விவரங்களைச் சேகரித்து வருகின் றனர். தேர்தல் ஆணையம் வழங் கும் படிவம் 20இல் அந்த விவ ரங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் தலைமை அவர்களுக்கு அறிவு றுத்தி உள்ளது.
ஜூன் 7ஆம் தேதிக்குள் இந்த விவரங்கள் தலைமை அலுவலகத் துக்கு வந்து சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ள காங்கிரஸ் தலைமை, அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.
இதன் மூலம் அனைத்து மாநி லங்களிலும் குக்கிராமங்கள் தொடங்கி நகர்ப்புறங்கள் வரை காங்கிரஸ், பாஜகவுக்கு எந்தளவு ஆதரவு உள்ளது, எதன் காரண மாக காங்கிரஸ் படுதோல்வியடைய நேரிட்டது என்பது குறித்து காங்கி ரஸ் தலைமை ஆராய உள்ளது.
மேலும் கட்சியின் பலவீனங் களை அறிந்துகொண்டு பலப் படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் காங்கிரஸ் தலைமை முடிவுசெய்துள்ளது.
இதே போல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் எழுப்பியுள்ள சந்தேகங்கள், சில கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறியவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

