மம்தா: நாட்டு மக்களிடம் வெறுப்பு அரசியலை பாஜக புகுத்துகிறது

மம்தா: நாட்டு மக்களிடம் வெறுப்பு அரசியலை பாஜக புகுத்துகிறது

1 mins read
5f7383ac-c458-4697-9c2a-195c76ebe7af
-
Google News Preferred Icon

புதுடெல்லி: நாட்டு மக்களிடையே வெறுப்பு அரசியலை பாஜக புகுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் வன்முறையையும் கல­வரத்­தையும் ஏற்படுத்த பாஜக முயல்வதாகவும் வலைத்தளப் பக்கம் ஒன்றில் அவர் குறிப்பிட் டுள்ளார்.

"கடவுள் ராமர் மீது எங்களுக்கும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. இறை வழிபாட்டிலும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

"ஆனால் பாஜக தலைவர்கள் அரசியலில் மதத்தைப் புகுத்து வதற்காக, ஜெய்ஸ்ரீராம் முழக் கத்தைத் தவறாகப் பயன்படுத்து கின்றனர்," என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் வன்முறையைத் தூண்டும் முயற்சி முறியடிக்கப் பட வேண்டும் என்று குறிப்பிட் டுள்ள அவர், இதற்காக மேற்கு வங்க மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியு றுத்தி உள்ளார்.

இதற்கிடையே, மம்தா பானர்ஜி அரக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான சாக்‌ஷி மகாராஜ் விமர்சித்துள்ளார். அவரது கருத்து புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.