திருவனந்தபுரம்: கேரளாவில் மீண் டும் நிபா கிருமி பாதிப்பு பரவுவதாக வெளியான தகவல் அம்மாநில மக்கள் மத்தியில் பீதியை ஏற் படுத்தி உள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் 23 வயது இளைய ருக்கு மருத்துவமனையில் நிபா கிருமி பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கேரள அரசு உறுதி செய்துள்ளது.
அந்த இளையருக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் செய் யப்பட்டுள்ளதாகவும் அவற்றின் முடிவுகள் விரைவில் வெளிவரும் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் நிபா கிருமி பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்துகள் வரவழைக் கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட் டார்.
நிபா கிருமி பாதிப்புக்கு ஆளாகி உள்ள இளையர் பொறி யியல் கல்லூரி மாணவர் என்று தெரிய வந்துள்ளது.
அவரது நண்பருக்கும் சிகிச் சை அளித்த இரண்டு செவிலி யர்களுக்கும் நிபா கிருமி பாதிப்பு இருக்கக் கூடும் என்ற ஐயத்தின் பேரில் மூவரும் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின் றனர்.
இந்நிலையில், நிபா கிருமி காய்ச்சல் வேகமாகப் பரவி வரு வதாக வெளிவரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என எர் ணாகுளம் மாவட்ட ஆட்சியர் முக மது சபிருல்லா தெரிவித்துள்ளார்.
இதேபோல் நிபா கிருமி பாதிப்பு டன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள இளையரின் உடல்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் பீதி அடைய வேண்டாம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
"நிபா கிருமி பாதிப்பு குறித்து தவறான கருத்துகளை யாரும் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம்.
"எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு ஏற்ப சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக் கைகள் எடுத்து வருகின்றனர்," என்றார் அவர்.
இதற்கிடையே நிபா கிருமி பாதிப்பு தமிழகத்துக்கும் பரவ வாய்ப்புள்ளதால் கேரளாவை ஒட்டி யுள்ள தேனி, குமுளி, போடிமெட்டு உள்ளிட்ட தமிழக எல்லைப் பகுதி களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

