திருவனந்தபுரம்: பிரதமர் மோடியைப் புகழ்ந்த காரணத்தால் காங்கிரஸ் மூத்த தலைவர் அப்துல்லாகுட்டி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அக்கட்சியில் சலசலப்பு நிலவுகிறது.
இந்நிலையில் தாம் சந்தர்ப்பவாதி அல்ல என அப்துல்லாகுட்டி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, தனிப்பெரும்பான்மை யுடன் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியை வாழ்த்தியும் பாராட்டியும் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் அப்துல்லாகுட்டி. இதற்கு காங்கிரசார் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து
இந்தப் பதிவு குறித்து ஐந்து தினங்களில் விளக்கம் அளிக்குமாறு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளபள்ளி ராமச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். எனினும் அப்துல்லாகுட்டி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
இதையடுத்து கட்சி விரோத செயலில் ஈடுபட்ட தாக குற்றம்சாட்டப்பட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் அப் துல்லா. இச்செய்தி தமக்கு வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கேரள காங்கிரஸ் தலைவரிடம் இருந்து இத்தகைய நடவடிக்கையை தாம் எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தாம் எப்போதுமே வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்ப தாகக் கூறியுள்ளார்.

