காந்தி குறித்து சர்ச்சைப் பதிவு: பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

காந்தி குறித்து சர்ச்சைப் பதிவு: பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

1 mins read

மும்பை: மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்ரியை மராட்டிய மாநில அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள காந்தி சிலைகளை அகற்ற வேண்டும் என்றும் இந்திய ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தியின் படத்தை அகற்ற வேண்டும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

மேலும் 1948ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்துக்காக கேட்சேவுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டிருந்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.