தமிழகத்துக்குக் கொடுக்க தண்ணீர் இல்லை: கர்நாடக அரசு கைவிரிப்பு

தமிழகத்துக்குக் கொடுக்க தண்ணீர் இல்லை: கர்நாடக அரசு கைவிரிப்பு

1 mins read

பெங்களுரு: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளபடி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியும் என கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக அணைகளில் நீர் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி 9.19 டிஎம்சி தண் ணீரை முழுமையாகத் திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என் றார். "எனினும் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. ஒருவேளை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்காவிட்டால் விகி தாச்சார அடிப்படையில் தண்ணீர் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

"மேகதாது அணை திட்டம் குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக எம்பிக் கள் கட்டாயம் விவாதம் நடத்த மாநில அரசு வலியுறுத்தும். கர் நாடக அரசு தற்போது வரை செய் துள்ள பணிகள் குறித்த அனைத்து தகவல்களும் நாடாளுமன்ற கூட் டத்தொடரில் தெரிவிக்கப்படும்," என்றார் அமைச்சர் சிவக்குமார்.

மேகதாது விவகாரம் தொடர் பாக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு குறித்து தங்களுக்குக் கவலை இல்லை என்று குறிப்பிட்ட அவர், மேகதாது அணையால் தமிழகம்தான் முழுமையாகப் பயன் அடையும் என்றார்.