கோல்கத்தா: இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுவிட்ட நிலையில், ஒடுங்கிப் போய்விட்ட எதிர்க்கட்சிகளை எல் லாம் ஒன்று திரட்டி பாஜகவுக்கு எதிராக புதிய போராட்டத்தை முன்னெடுக்க திரிணாமூல் காங் கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி புதிய வியூகம் தீட்டி இருக்கிறார்.
மம்தா மேற்கு வங்காள முதல் வராகவும் இருக்கிறார், அவரின் அசைக்க முடியாத மாநிலமாகக் கருதப்பட்ட மேற்கு வங்காளத்தில் கூட பாஜக குறிப்பிடத்தக்க வெற் றியைச் சாதித்து இருக்கிறது.
இந்த நிலையில், தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்திற்குப் பதில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண் டும் என்றும் அதற்காக எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் என்றும் மம்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்வதற் காக மேற்கு வங்காளத் தலைநகர் கோல்கத்தாவில் திரிணாமூல் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் நடந்தது.
அதற்குப் பின் செய்தியாளர் களிடம் பேசிய மம்தா, வளர்ந்த நாடான அமெரிக்காவில்கூட தேர் தலில் வாக்குப்பதிவு இயந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் வாக்குச்சீட்டு முறைதான் நடப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி களுக்கு இருப்பதாகவும் அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வகை யில் அவை பழையபடி வாக்குச்சீட்டு நடைமுறையைக் கொண்டு வர பாடுபட வேண்டும் என்றும் மம்தா வலியுறுத்தினார்.
"இதற்காக பெரிய அளவில் இயக்கம் தொடங்க வேண்டும்.
"அது மேற்கு வங்கத்திலிருந்து உருவாக வேண்டும். எனவே எதிர் அணியில் உள்ள 23 எதிர்க்கட்சி களும் ஒன்றிணைந்து வாக்குச் சீட்டு முறை வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டும்," என மம்தா உரக்கக் குரல் கொடுத்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம், பண பலம், ஊடக பலத்தைப் பயன் படுத்தி பாஜக வென்றதாகவும் மம்தா மத்திய ஆளும் கட்சி மீது புகார் கூறினார்.

