ஜம்முவை மிரட்டும் 'ஜட்டி கொள்ளையர்'

ஜம்முவை மிரட்டும் 'ஜட்டி கொள்ளையர்'

1 mins read

ஜம்மு: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு நகரில் ஏற்கெனவே பயங்கரவாத மிரட்டல் நீங்காத தலைவலியாக தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில், அங்கு இரவு நேரத்தில் ஜட்டி அணிந்து வந்து வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பல் பெரிய அளவில் அச்சத்தைக் கிளப்பி இருக்கிறது.

ஜட்டி கொள்ளையர் கொள்ளை அடிப்பதைக் காட்டும் காணொளி இணை யத்தில் வெளியாகி பயத்தைக் கிளப்பிவிட்டுள்ளது.

உள்ளாடை மட்டுமே அணிந்துள்ள ஐந்து பேர் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த காட்சி, ஜம்மு நகர வீதி ஒன்றின் பிரத்தியேக படச்சாதனம் மூலம் தெரியவந்ததை அடுத்து அந்நகர மக்கள் பயத்தில் மூழ்கியுள்ளனர்.

இதனை அடுத்து, போலிஸ் சுற்றுக்காவல் முடுக்கிவிடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.